யாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்த உலக தமிழர் பேரவை

0
169

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள உலக தமிழர் பேரவையினர், யாழ். மறைமாவட்ட ஆயரை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர். குறித்த சந்திப்பு தொடர்பில் உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் தெரிவிக்கையில்,

“யாழ், மறைமாவட்ட ஆயரை இன்றைய தினம் சனிக்கிழமை சந்தித்து அவருக்கு நாங்கள் மேற்கொள்ள உள்ள வேலை திட்டம் தொடர்பில் விரிவாக விளங்கப்படுத்தினோம்.

எமது திட்டத்தினை நல்ல ஒரு திட்டம் இதை தான் வரவேற்பதாக தெரிவித்த ஆயர் மக்கள் மயப்படுத்தப்பட்ட திட்டத்தினை தாம் எப்போதும் வரவேற்போம். மேன்மேலும் இந்த விடயத்தினை தொடர்ச்சியாக செயற்படுத்துமாறு ஆயர் எம்மிடம் கோரினார் என தெரிவித்தார்.