மட்டக்களப்பில் பொலிஸார் நடவடிக்கையால் பீதியில் மக்கள்!

0
146

மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தலில் பங்கேற்றவர்களின் வரவழைத்து பொலிஸார் வாக்குமூலம் பெறும் நடவடிக்கையால் மக்கள் பீதியில் உள்ளதாக கூறபடுகின்றது.

நினைவேந்தலில் பங்கேற்றவர்களின் மோட்டர் சைக்கிள் இலக்கத்தை வைத்து பெயர் முகவரியை பெற்று ஊடகவியலாளர் உட்பட 4 பேரை நேற்று வெள்ளிக்கிழமை (8) வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து பொலிஸார் நினைவேந்தலில் பங்கேற்றது தொடர்பாக வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர்.

 மாவீரர் நினைவேந்தலில் பங்கேற்றவர்களுக்கு அச்சுறுத்தல்

மட்டக்களப்பில் பொலிஸார் நடவடிக்கையால் பீதியில் மக்கள்! | People Panic Because Of Police Action Batticaloa

கடந்த மாதம் 27 ஆம் திகதி கிரான் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற நினைவேந்தலில் பங்கேற்பதற்காக மோட்டர் சைக்கிளில் சென்றுள்ளனர்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை வாழைச்சேனை பொலிஸார் ஊடகவியலாளர் பிரதீபன் உட்பட 4 பேருக்கு கையடக்க தொலைபேசி ஊடாக பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைக்கப்பட்டனர்.

இதனையடுத்து சம்பவதினமான நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸ் நிலையத்துக்கு சென்று மோட்டர் சைக்கிள் பிரச்சினை தொடர்பாக போக்குவரத்து பொலிஸார் வருமாறு கூறியுள்ளனர்.

எனினும் நாங்கள் அழைத்தது மாவீரர் நினைவேந்தலில் பங்கேற்றியது தொடர்பாக வாக்கு மூலங்களை பெற வரவழைத்ததாக தெரிவித்த பொலிஸார் வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர். துயிலும் இல்லத்திற்கு மோட்டர் சைக்கிளில் சென்று அதனை நிறுத்திவிட்டு நினைவேந்தலில் பங்கேற்றியிருந்தனர்.

மட்டக்களப்பில் பொலிஸார் நடவடிக்கையால் பீதியில் மக்கள்! | People Panic Because Of Police Action Batticaloa

இந்நிலையில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள்களின் இலக்கங்களை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் எழுதி எடுத்துக் கொண்டு அதனை மோட்டர் போக்குவரத்து திணைக்களத்தற்கு அனுப்பி அந்த மோட்டர் சைக்கிளின் உரிமையாளரின் பெயர் முகவரியை பெற்று அதனை கொண்டு அவர்களை தொடர்பு கொண்டு பொய்யான பிரச்சினைகளை தெரிவித்து பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்துள்ளனர்.

நினைவேந்தலில் பங்கேற்றியவர்களை பொய் தெரிவித்து வரவழைத்து பொலிஸார் அச்சுறுத்தில் ஈடுபட்டு வருகின்ற சம்பவத்தால் மக்கள் பீதியடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.