காதலனுடன் இணைந்து தனது தாயை கொலை செய்து சூட் கேஸ் ஒன்றில் மறைத்த பெண்ணொருவருக்கு 26 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 28 வயதான ஹீதர் மெக் என்ற அமெரிக்க பெண்ணுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் பாலி தீவில் விடுமுறையை கழித்துக்கொண்டிருந்த போது ஷீலா சோன் வீசா மெக் என்ற செல்வந்த பெண் முச்சு திறண செய்யப்பட்டு தாக்கி கொலை செய்யப்பட்டார்.
அப்போது 18 வயதாக இருந்த ஹீதர் மெக் தனது காதலன் டோமி ஷீஃபர் என்பவருடன் தாயை கொலை செய்து, சூட் கேஸில் போட்டுள்ளார்.

சடலத்துடன் கூடிய சூட் கேஸ் கார் ஒன்றின் டிக்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது. சடலம் மீட்கப்பட்ட போது ஹீதர் மெக் தனது காதலனுடன் வேறு ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார்.
ஹீதர் மெக் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டார். அவருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் 2021 ஆம் ஆண்டு அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இதனையடுத்து அமெரிக்க சென்ற அவரை அமெரிக்க பிரஜையை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்தனர்.
நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை ஹீதர் மெக், சிக்காகோவில் உள்ள சிறையில் இரண்டு ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இவரது காதலர் டோமி ஷீஃபர் இன்னும் இந்தோனேசியா சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
