லியோ படத்தின் “அன்பெனும்” பாடல் இன்று மாலை வெளியாகவுள்ளதாக படக்குழு புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார்.
அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
லியோ திரைப்படம் ஒக்டோபர் 19ம் திகதி வெளியாகவுள்ள நிலையில், மூன்றாவது பாடலை இன்று மாலை படக்குழு வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்கள் மற்றும் படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இன்று வெளியாக இருக்கும் “அன்பெனும்” பாடல் குறித்த எதிர்ப்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது.
#Anbenum – #LeoThirdSingle is releasing tomorrow #Thalapathy @actorvijay na @trishtrashers @Dir_Lokesh @anirudhofficial @SonyMusicSouth #Leo pic.twitter.com/qpA7JX6cuQ
— Jagadish (@Jagadishbliss) October 10, 2023