இலங்கைக்கு வரவிருந்த விமானத்தில் ஏற்பட்ட பதற்றம்

0
162

அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையை காட்டும் காணொளி ஒன்றை வெளிநாட்டு ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன.

இலங்கைக்கு வரவிருந்த விமானம் ஒன்றின் சரக்கு பிரிவில் நபர் ஒருவர் நுழைந்ததால் இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது பாதுகாப்பு தரப்பினர் சந்தேக நபரை கைது செய்ததுடன் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

30 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.