கோட்டாபயவின் உத்தரவை புறக்கணித்த தமிழ் அரச அதிபர்!

0
673

ஜனாதிபதி கோட்டபாயவினால் வெளியிடப்பட்ட சுற்றிக்கைக்கு அமைய மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் செயற்படாது அரசியல் கட்சியொன்றின் அழுத்தத்திற்கமைய உள்வாங்கப்பட்டு செயற்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு நகரில் உள்ள ஐஓசி எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் விநியோக நடவடிக்கையின் போது அரசாங்க அதிபரினால் அத்தியாவசிய சேவையாக கருதப்பட்டு அனுப்பப்பட்டிருந்த பெயர் பட்டியலில் மட்டக்களப்பு மாநகரசபையின் பெயர் குறிப்பிடப்படவில்லையெனவும் மாநகரசபை முதல்வர் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.