தமிழக அரசாங்கம் இலங்கையின் பிரச்சனையை சரியாக புரிந்து கொள்ள தவறிவிட்டது என்று இலங்கையின் முன்னாள் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார். இந்தியாவின் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலேயே முத்தையா முரளிதரன் இதனை கூறியுள்ளார்.
இலங்கையில் யுத்தம் நடைபெற்ற போது சில தமிழக அரசியல்வாதிகள் பிரச்சினையை சரியாக புரிந்து கொள்ளாது என்னை துரோகி என்றும் கூறினார்கள் என முத்தையா முரளிதரன் அங்கு கருத்து தெரிவிக்கையில் கூறிப்பிட்டுள்ளார்.
மேலும் முத்தையா முரளியின் வாழ்க்கை வரலாறு தொடர்பாக உருவாக்கப்பட்ட ‘A Legendary 800 – Against All Odds’ என்ற திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் காட்சிப்படுத்தப்படுகிறது.