ரணிலிற்கு வழங்கிய ஆதரவை மீளப்பெற்ற இராஜாங்க அமைச்சர்

0
123

இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கிய ஆதரவை மீளப்பெற்றதுடன் மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர முன்னர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவர் மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.