இரண்டாக பிளவுபடும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி..!

0
227

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய பதவிகளை அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொள்ளும் வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாக உட்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் செயலாளர் நாயகம் மற்றும் பொதுச் செயலாளர் பதவிகளை பெற்றுக்கொள்வதற்காக அக்குழுவினர் தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆதரவும் கிடைத்துள்ளதாக அறியமுடிகின்றது.

தீவிரமடையும் பதவி மோதல்! இரண்டாக பிளவுபடும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி | Sri Lanka Freedom Party Against Dayasiri

கட்சிக்குள் கடும் விரிசல் 

இந்த தகவலினால் தயாசிறி ஜயசேகர மிகவும் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் கட்சியின் விவகாரங்களில் சற்று விரக்தியடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் தயாசிறி ஜெயசேகரவின் தொகுதியில் நடைபெறவிருந்த கட்சியின் மாநாடு அரசாங்கத்தை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நலன் கருதி கொழும்பில் நடத்தப்பட்டுள்ளமையினால் கட்சிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.