ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் இஸ்ரேல் இராணுவத்தால் கைது..!

0
166

காசாவில் பதற்றமான சூழ்நிலை வலுப்பெற்றுவரும் நிலையில், ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.

ஹமாஸ் இராணுவத்தின் முக்கியத் தலைவரான ஒமர் அல்-ஃபயேத் என்பவரைக் கைது செய்துள்ளதாக இஸ்ரேல் தனது டுவிட்டர் தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் இராணுவத்திற்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போர் தொடர்ந்தும் நீடித்து வருகிறது.

கைது நடவடிக்கை

இதன் தொடர் தாக்குதல்களால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வரும் நிலையில், சர்வதேச மனிதஉரிமை ஆணையகமும் கடுமையான கண்டனங்களையும் வெளியிட்டு வருகிறது.

எனினும் இஸ்ரேல் தனது போர் கொள்கையில் நிலையான தடத்தை கொண்டு போரை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் குறித்த கைது தொடர்பில் இஸ்ரேல் இராணுவம் தெரிவிக்கையில், காசாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் பொலிஸ் மற்றும் இஸ்ரேலின் பாதுகாப்புப்படை இணைந்து இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளது.

மேலும், நடவடிக்கையின்போது அடையாளம் தெரியாதநபர் நடத்திய தாக்குதலில் இரண்டு இஸ்ரேல் வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.