2018 ஆம் ஆண்டு பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் 96. பாடசாலைக் கால காதலை அடிப்படையாகக் கொண்டு இத் திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இயக்குநரிடம் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த கேள்விகள் தொடர்ந்து கேட்கப்பட்டு வந்த நிலையில்,
“96 திரைப்படம் காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் அதன் இரண்டாம் பாகம் குடும்ப பிரச்சினையை கருவாகக் கொண்டு உணர்வுப் பூர்வமான ஒரு கதையாக உருவாகவுள்ளது” என தெரிவித்துள்ளார்.
இப் படத்துக்கான படப்பிடிப்புக்களை சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.
