காதலியை கொடூரமாக கொன்ற நபருக்கு மன்னிப்பு வழங்கிய ரஷ்ய அதிபர்!

0
244

காதலியை 111 முறை கத்தியால் குத்தி சித்திரவதை செய்து கொன்ற ரஷ்ய நபருக்கு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் மன்னிப்பு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த ரஷ்ய நபர் உக்ரைனில் போரில் ஈடுபட முடிவு செய்ததை அடுத்து விளாடிமிர் புடின் மன்னிப்பு வழங்கியதாக தெரிய வருகின்றன.

தனது முன்னாள் காதலியை கொடூரமாக கொன்றதற்காக விதிக்கப்பட்ட 17 வருட சிறைத் தண்டனையை விளாடிஸ்லாவ் கன்யூஸ் ஒரு வருடத்திற்கும் குறைவாகவே அனுபவித்துள்ளார்.

காதலியை கொடூரமாக கொன்ற நபருக்கு மன்னிப்பு வழங்கிய ரஷ்ய அதிபர்! பரபரப்பு பின்னணி | Putin Forgives Russian Man Killed Girlfried

காதலை முறித்துக் கொண்ட ஆத்திரத்தில் கன்யூஸ் தனது முன்னாள் காதலியை சீரழித்து 111 முறை கத்தியால் குத்தி மூன்றரை மணி நேரம் சித்திரவதை செய்துள்ளார். பின்னர் அவர் ஒரு கேபிள் இரும்பினால் குறித்த பெண்ணின் கழுத்தை நெரித்து இறுதியில் அவளைக் கொன்றுள்ளார்.

கன்யூஸ் ரஷ்ய ராணுவ வீரர் என்பது பின்னர் வெளிச்சத்துக்கு வந்தது. தற்போது கன்யூஸ் விடுவிக்கப்பட்டுள்ள தகவல் அறிந்து, கொல்லப்பட்ட பெண்ணின் தாயார் கடுமையாக விமர்சித்துள்ளார். உக்ரைன் எல்லைக்கு கன்யூஸ் மாற்றப்படும் தகவலை சிறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

குற்றவாளி விளாடிஸ்லாவ் கன்யூஸ் மன்னிக்கப்பட்டார் எனவும் அவரது தண்டனை ஏப்ரல் 27 அன்று ஜனாதிபதி ஆணை மூலம் நீக்கப்பட்டது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.