இந்தியாவின் கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் பெய்த கன மழையால் வீதிகள் குன்றும் குழியுமாகக் காட்சியளிக்கின்றன. இந்நிலையில், வீதிகளை புனரமைக்க வேண்டும் என வலியுறுத்தி அம்மாவட்ட மக்கள் வித்தியமான முறையில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன்படி, உடுப்பி – மால்பே பிரதான வீதியில் எமதர்மன் மற்றும் சித்திரகுப்தன் வேடம் அணிந்த சில ஆண்கள் வீதிகளில் பள்ளமாக இருக்கும் பகுதிகளில் நீளம் தாண்டுதல் போட்டியை நடத்தியுள்ளனர்.
வீதிகளை புனரமைக்காவிட்டால் விபத்துக்கள் ஏற்படும் என்பதை வலியுறுத்தும் விதமாக, இந்தப் போராட்ட வடிவத்தை அவர்கள் முன்னெடுத்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பான காணொளிகள் தற்போது சமூக வலைத் தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.