உண்மையான போராட்டம் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
பெற்றோர்கள் வீதிக்கு இறங்குவார்கள்
முன்னைய போராட்ட அமைப்பு ராஜபக்ஷக்களை வீட்டிற்கு துரத்துவதை நோக்கமாகக் கொண்டது என்றும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ஆனால் இந்தக் கிளர்ச்சி பெற்றோரால் வீட்டிலிருந்து தொடங்கும் என்றும் குழந்தைகளின் பசி தாங்க முடியாததால், அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாமல் தெருவில் இறங்குவார்கள் என்றும் ஹிருணிகா பிரேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.
