மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் (Elizabeth) உடல் ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பர்க் நகரின் ஹோலிரூட் ஹவுஸ் மாளிகையில் இருந்து செயிண்ட் கில்ஸ் தேவாலயத்திற்கு சிறப்பு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.
‘ஓக்’ மரத்திலான சவப்பெட்டியில் வைக்கப்பட்டு பால்மோரல் கோட்டையில் இருந்து புறப்பட்ட ராணி எலிசபெத் (Elizabeth) உடல் எடின்பரோ நகருக்கு போய்ச் சேர்ந்தது.

வழியெங்கும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் வரிசையில் நின்று காரில் வைக்கப்பட்டிருந்த ராணியின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
செயிண்ட் கில்ஸ் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு 24 மணி நேரம் வைக்கப்பட உள்ளது.



