விடுதலைப் புலிகளின் தலைவரின் நோக்கம் நிறைவேற இடமளிக்க முடியாது! சரத் ஆவேசம்

0
306

இந்தியாவின் கடும் அழுத்தத்தினாலேயே அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முயற்சிப்பதாக ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆயுதமேந்திய நோக்கத்தை பேனாவினால் வழங்க ஒரு போதும் இடமளிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மக்கள் விடுதலை முன்னணியின் காட்டிக் கொடுப்பு செயற்பாட்டை நாட்டு மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.