போராட்டகாரர்கள் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவார்கள்; தானிஸ் அலி

0
324

நாட்டுக்கு புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தி கொழும்பு நகரின் அதிகாரத்தை கைப்பற்ற கட்சிசார்பற்ற போராட்டகாரர்கள் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவார்கள் என சமூக செயற்பாட்டாளரான தானிஸ் அலி நேற்று கொழும்பில் தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகளுக்கு சவாலை ஏற்படுத்துவோம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீடு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்க குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு சென்றிருந்த போது, ஊடகங்களிடம் அவர் இதனை கூறியுள்ளார்.

இதனடிப்படையில், கட்சிசார்பற்ற போராட்டகாரர்களின் அணி ஏனைய அரசியல் கட்சிகளுக்கு சவாலை ஏற்படுத்தி கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை கைப்பற்றும்.போராட்டம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு அதற்கு ஆதரவு வழங்க முன்வந்தன.

தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்

கொழும்பு நகரின் அதிகாரத்தை போராட்டகாரர்கள் கைப்பற்றுவார்கள் | The Protesters Will Seize Power The Colombo

எனினும் தற்போது அந்த அரசியல் கட்சிகள் அரசியல் ரீதியாக பிரிந்துள்ளனர். நான் உட்பட எமது அணியினர் தற்போது கட்சி சார்பற்றவர்களாகவே இருக்கின்றோம்.

போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றோம். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீடு தீ வைக்கப்பட்ட போது நான் காலிமுகத்திடலில் இருந்தேன். அந்த சம்பவத்துடன் எனக்கு எவ்வித தொடர்பும் கிடையாது என தானிஷ் அலி மேலும் தெரிவித்துள்ளார்.