றம்புக்கனையில் இடம்பெற்ற அனர்த்தத்தைத் தொடர்ந்து தாம் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் கோரி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை கலைக்க காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
டுவிட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பிரதமர், றம்புக்கனையில் இடம்பெற்ற அனர்த்தத்தைத் தொடர்ந்து தாம் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டிற்கு எப்போதும் மிகுந்த மரியாதையுடன் சேவையாற்றும் இலங்கை காவல்துறையால் கடுமையான, பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தான் நம்புவதாக மகிந்த ராஜபக்ச கூறினார்.