ஐக்கிய இராச்சியத்தில் இலங்கையருக்கு கிடைத்த பெருமை!

0
26

பிரித்தானியாவில் பொதுச்சேவைகள் மற்றும் அரசியலில் நீண்ட காலமாக தமது பங்களிப்பை வழங்கி வரும் இலங்கையைச் சேர்ந்த லூசியன் பெர்னாண்டோவுக்கு தத்துவம் மற்றும் அரசியலில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய இராச்சிய பொதுத் தேர்தலில் போட்டியிட்ட லூசியன் பெர்னாண்டோ கொழும்பு புனித ஆசீர்வாதப்பர் கல்லூரியில் கல்வி கற்றவர் இவரின் வழிமரபினர் அனைவரும் ஐக்கிய இராச்சியத்தில் அரசதுறைகளில் கடமையாற்றியுள்ளனர்.

லூசியன் பெர்னாண்டோவின் தாத்தா, பூட்டனார் உள்ளிட்வர்கள் ஐக்கிய இராச்சியத்தின் கடற்படையிலும் கடமையாற்றியுள்ளனர். லூசியன் பெர்னாண்டோ நீண்ட காலமாக பொதுச்சேவைகள் மற்றும் அரசியலில் தீவிரமாக செயற்பட்டு வந்துள்ளார்.

இது தொடர்பில் லூசியன் பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில்,

“இந்த விருதுக்காக நான் மிகவும் நன்றி உள்ளவனாகவும், கடமைப்பட்டவனாகவும் இருக்கிறேன். இந்த அற்புதமான அங்கீகாரத்திற்காக கடினமாக உழைத்து என்னை பரிந்துரைத்தவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். தீவிர அரசியலில் இருந்து விலகிய பின்னரும் மக்கள் தொடர்ந்து எனது வேலையை நினைவில் வைத்து மதிப்பளிப்பது எனக்கு மனதைத் தொடுகிறது என கூறியுள்ளார்.