சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு!

0
164

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி நேற்று ஒரு பரல் பிரண்ட் ரக கச்சா எண்ணெய் விலை 1.70 டொலரால் உயர்ந்துள்ளது.

இதன்படி ஒரு பரல் கச்சா எண்ணெய்யின் விலை 91 டொலர்களைத் தாண்டியுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏப்ரல் 5ஆம் திகதிக்குப் பிறகு இதுவே அதிகபட்ச உயர்வாகும். மேலும், டபிள்யூ.டி.ஐ. கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 85.66 டொலராக பதிவாகியுள்ளது.