குறையவுள்ள கோழி இறைச்சியின் விலை..

0
243

கோழி இறைச்சியின் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு இன்று வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.  

இதன்படி, 200 ரூபாவினால் கோழி இறைச்சியின் விலை குறைக்கப்படும்  என எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ  தெரிவித்துள்ளார்.

வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ மற்றும் கோழி இறைச்சி உற்பத்தியாளர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம்(21.09.2023) இடம்பெறவுள்ளது. 

தீர்மானம் இன்று 

இந்த நிலையில், இன்றைய கலந்துரையாடலின் பின்னர் விலை குறைப்பு தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

கோழி இறைச்சியின் விலை குறைகிறது: இன்று வெளியாகவுள்ள தீர்மானம் | Chicken Price In Sri Lanka

தற்போது ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1250 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது என்றும் அதன் விலை 200 ரூபாவினால் விலை குறைக்கப்பட வேண்டுமெனவும் வர்த்தக அமைச்சர் கூறினார்.

இன்றைய கலந்துரையாடலின் போது கோழி இறைச்சியின் விலையை 200 ரூபாவினால் குறைப்பதற்கு உற்பத்தியாளர்கள் இணங்குவார்கள் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

இல்லாவிடின் கோழி இறைச்சி இறக்குமதி தொடர்பில் இன்று தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.