ஜனாதிபதி என்னை அரசியல் ரீதியாக பழி வாங்குகிறார்; ரொஷான் ரணசிங்க

0
194

வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரி ஓட வேண்டிய தேவை எனக்கு இல்லையெனவும் எனக்கு வாழ்வதற்கான உரிமை வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற அமர்வு இன்று (2023.11.27) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமான வாய்மூல வினாக்களுக்காக விடைக்கான நேரத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் என்னை அரசியல் ரீதியாக பழி வாங்குகிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

ஊழல் , மோசடிகளை வெளிக்கொணர்ந்த எனக்கு அப்படிச் செய்யலாமா? எனவும் இதன்போது கேள்வி எழுப்பினார்.

ஜனாதிபதி ரணில் என்னை அரசியல் ரீதியாக பழி வாங்குகிறார் : அமைச்சர் ரொஷான் ரணசிங்க | President Ranil Is Taking Revenge Politically

எனது அரசியல் வரலாற்றில் நான் யாரிடமும் கை நீட்டியது கிடையாது. எந்த தீய செயல்களுக்கும் துணை நின்றதும் கிடையாது எனவும் அவர் தெரிவித்தார்.