ஜனாதிபதிக்கு கிடைத்த உள்ளூர் ஆடை!

0
351

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் ஆடை நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பௌசுல் ஹமீட் வழங்கிய  உள்ளூர் ஆடை வர்த்தக நாமமான Hameedia உடையணிந்து காணப்பட்டார்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படம் அவர் ஹமீடியா ஜாக்கெட்டுடன் ஜனாதிபதியை அலங்கரிப்பதைக் காட்டுகிறது.

இந்த தருணத்தை பகிர்ந்து கொண்ட பௌசுல் ஹமீட் இலங்கை வர்த்தக நாமங்கள் உலக சந்தையில் நுழைவதற்கான சாத்தியக்கூறுகளை ஜனாதிபதி அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

“சர்வதேச சந்தைக்கு தங்கள் நிறுவன தர அடையாளத்தை எடுத்துச் செல்ல விரும்பும் அனைவருக்கும் இது மிகவும் தேவையான முன்முயற்சியாக இருக்கும்,” என்று அவர் கூறியுள்ளார்.

உள்ளூர் கைத்தொழில்களும் உள்ளூர் தயாரிப்புகளும் தமது உற்பத்திகளை மேம்படுத்துவதில் முதலீடு செய்து இலங்கையை புத்துயிர் பெறச் செய்ய வேண்டிய நேரம் இது என்று ஹமீட் மேலும் தெரிவித்துள்ளார்.