இன்று ஒன்று கூடும் தமிழரசுக் கட்சியின் அரசியல் உயர்பீடம்

0
194

இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் உயர்பீடக் கூட்டம் இன்று (19.06.2023) திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் இந்தக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இரா. சம்பந்தன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கடந்த 8 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நடந்த பேச்சு தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளது. அத்துடன், எதிர்காலச் செயல்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளன என்றும் தெரியவருகின்றது.