மது போதையில் பெண்களிடம் முறை தவறி நடக்க முற்பட்டு வசமாக சிக்கிய பொலிஸ்! யாழில் சம்பவம்..

0
194

யாழ்ப்பாணத்தில் உள்ள வீதியொன்றில் இரவில் பயணிக்கும் பெண்களிடம் பொலிஸ் அதிகாரி ஒருவர் முறை தவறி நடக்க முற்பட்ட வேளை பொதுமக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

குறித்த பொலிஸ் அதிகாரி இரவுவேளையில் மது அருந்திவிட்டு அவ்வீதியில் பயணிக்கும் பெண்களிடம் முறை தவறி நடக்க முயற்சித்திருப்பதாக முகநூலில் வெளியான வீடியோவில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தின் போது அங்கு கூடிய பொதுமக்களால் குறித்த பொலிஸ் அதிகாரி விரட்டியடிக்கப்பட்டுள்ளார்.