ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் எரிக்கப்பட்டதன் பின்னர் அங்கிருந்த வெளிநாட்டு மதுபான போத்தல்களை திருடினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
சந்தேக நபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து கைதான சந்தேக நபரை புதன்கிழமை (24) வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது