15 வயதான சிறுமியை வன்கொடுமைக்கு உட்படுத்திய நபர்!

0
370

15 வயதான பாடசாலை மாணவியை வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில்  44 வயதுடைய  நபர்  பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொம்பே பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இடம் பெற்றுள்ளது.

அத்துடன் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு அறை வசதி ஏற்படுத்திக் கொடுத்ததாக கூறப்படும் உணவகத்தின் முகாமையாளரும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் இருவரும் பூகொட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.