சிக்கன் கறி ஆர்டர் செய்தவருக்கு எலும்பு பார்சலுடன் வந்த கடிதம்!

0
508

ஆன்லைனில் பொறித்த கோழிக்கறிக்கு ஆர்டர் செய்த நபருக்கு வெறும் எலும்புகள் வந்துள்ளது.

டேமியன் சான்டர்ஸ் (Damian Sanders) என்ற நபர் பசித்ததால் ஆன்லைனில் பொறித்த கோழிக்கறிக்கு ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து அவருக்கு டெலிவரி செய்யப்பட்ட பார்சலை பிரித்து பார்த்துள்ளார்.

அதில் பொறித்த கோழிக்கறி துண்டுகளுக்கு பதில் எலும்புகளும் அதிக பசி ஏற்பட்டதால் அதை தாம் சாப்பிட்டு விட்டதாக கூறி மன்னிப்பு கேட்டு டெலிவரி பையன் எழுதி வைத்த துண்டு சீட்டும் இருந்துள்ளது.

கோழிக்கறி ஆர்டர் செய்த நபருக்கு; பார்சலுடன் வந்த கடிதம்! | Chicken The Letter That Came With The Parcel

இக்காட்சியை வீடியோவாக பதிவிட்டு சமூகவலைதள பக்கத்தில் டேமியன் சான்டர்ஸ் (Damian Sanders) பதிவிட அது வேகமாக பகிரப்பட்டு வருகிறது.