இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆசான் வி. சிவலிங்கம் அவர்களை மோகன் கணபதிப்பிள்ளை நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக முகநூலில் பதிவிட்டுள்ளார். ரணிலின் ஆசான் வி. சிவலிங்கம் அவர்களுக்கு தற்போது 98 வயது.
மட்டக்களப்பு மாவட்டம் பெரிய கல்லாறைச் சேர்ந்த வி. சிவலிங்கம் ரோயல் கல்லூரியில் ஆசிரியராக இருந்தவேளை இவரின் மாணவனாக ரணில் விக்ரமசிங்க இருந்துள்ளார்.
சந்திப்பின்போது ஜனாதிபதி அவர்களுடன் தொலைபேசி தொடர்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். நாளை இவரை ஏறாவூருக்கு ஜனாதிபதி வரும் வேளை அழைத்து வருமாறு ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.