குயின்ஸ்லாந்து நாட்டை சேர்ந்த கெர்ரி வால்டன் என்பவர் வார்விக்கில் இருந்தபோது வினோதமான பொம்மை ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
மேலும் அந்த பொம்மை பார்ப்பதற்கு பயங்கரமான தோற்றத்தை கொண்டிருந்தாலும் அதிர்ஷ்டத்தை கொண்டுவந்ததாக அவர் கூறியுள்ளார்.
குறித்த பொம்மை சுமார் 2 நூற்றாண்டுகளாக மறைக்கப்பட்டிருக்க வேண்டும் என நம்பப்படுகிறது. அந்த பொம்மை ஐரோப்பிய பயணிகளிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்டதைக் கண்டறிந்த அவர் அதற்கு ‘லெட்டா மீ அவுட்’ என்று வித்தியசமான பெயரை வைத்துள்ளார்.
குறித்த பொம்மையுடனான தன் சகவாசத்தை வெளிப்படுத்திய அவர் கடந்த 2002 ஆம் ஆண்டு தனக்கு ஏற்பட்ட ஓர் அமானுஷ்ய அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதாவது தான் உணர்வற்ற ஓர் நிலையில் காணப்பட்டதாகவும், அது பயமுறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அது எப்போதும் தனக்கு அதிர்ஷ்டத்தை மட்டுமே தேடி தருவதாக அவர் குறிப்பிடுகிறார்.
