கனடாவிலிருந்து யாழிற்கு வந்த நபரொருவரின் இரண்டு செவிப்பறை யாழ் யுவதி அடித்த அடியில் கிழிந்த சம்பவம் ஒன்று சமீபத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. இந்த சம்பவம் யாழ்.கசூரினா கடற்கரையில் அரங்கேறியுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
கடந்த மாதம் கனடாவிலிருந்து நாட்டுக்கு வந்த குறித்த நபர் புத்தாண்டு தினத்தன்று நண்பர்கள் சிலருடன் கசூரினா கடற்கரைக்கு சென்றுள்ளார்.
அங்கு போதை தலைக்கேறிய நபர் தண்ணீருக்குள் நின்றபடி அங்கிருந்த யுவதி ஒருவரை தகாத வார்த்தைகளால் கேலி பேசியுள்ளார்.
இதனால், ஆத்திரம் அடைத்த குறித்த யுவதி கனேடிய நபர் தண்ணீரில் இருந்து வெளியே வரும் வரை காத்திருந்து அவர் கன்னத்தில் ஓங்கி அறைத்ததாக கூறப்படுகின்றது.
யுவதியின் அறையால் செவிப்பறை கிழிந்ததால் யாழில் உள்ள மருத்துவமனை ஒன்றில் குறித்த கனடா நபர் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகின்றது.
அதேவேளை யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக போதைபொருள் பாவனைகள் இளையோர் மத்தியில் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இவ்வாறான நிலையில் பொதுவெளியில் அத்துமீறிய நபரை பெண் தாக்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.