ஆட்டு உரிமையாளரின் அந்தரங்க உறுப்பை கடித்து குதறிய நபர்..!

0
236

தனக்கு சொந்தமான பொருட்களை பக்கத்து வீட்டுக்காரரின் ஆடுகள் சேதப்படுத்தியதால் ஆடுகளின் உரிமையாளரின் அந்தரங்க உறுப்பை பாதிக்கப்பட்ட நபர் கடித்து குதறிய சம்பவம் ஒன்று இந்தியாவில் அரங்கேறியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வீட்டிற்குள் நுழைந்த ஆடுகள்

உத்தரப்பிரதேச மாநிம் ஷாஜகான்பூரை சேர்ந்தவர் கங்காராம். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். அந்த ஆடுகள் அவ்வப்போது கங்காராமின் வீட்டிற்குள் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் , வீட்டிற்குள் நுழைந்த ஆடுகள் விலை மதிப்புள்ள பொருட்களை சேதப்படுத்தியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கங்காராம், பக்கத்து வீட்டுக்காரரான அந்த ஆடுகளின் உரிமையாளரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளி விட்டு அவரது அந்தரங்க உறுப்பை கடித்து குதறியுள்ளார்.

இதனையடுத்து ஆடுகளின் உரிமையாளர், மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அவரை அயலவர்கள் அனுமதித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.