எங்களை கண்டு எதிர்கட்சியினர் அச்சமடைந்துள்ளனர் – விஜய்

0
36

1967 மற்றும் 1977ஆம் ஆண்டு தேர்தல்களின் வெற்றி விளைவை 2026 தேர்தலிலும் நிகழ்த்திக் காட்டுவோம் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரையை நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் கடந்த 20ஆம் திகதி மேற்கொண்டிருந்தார். இதற்போது தமிழகத்தின் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சித்து விஜய் பேசியிருந்தார்.

இதனிடையே, நாகையில் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதாக கூறி தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஐவர் மீது பொலிஸார் நான்குபிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதேபோன்று திருவாரூரிலும் தமிழக வெற்றிக் கழகத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாகை, திருவாரூர் பரப்புரையை வெற்றிகரமாக நிறைவு செய்ய உதவியதற்காக அந்தந்த மாவட்ட தொண்டர்களுக்கு விஜய் நன்றி தெரிவித்துள்ளார். தனது சமூக வலைதளத்தில் விடுத்துள்ள பதிவொன்றை விஜய் வெளியிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தைப் பற்றி பொய்யான கதைகளை பரப்புவோர் ஒவ்வொரு நாளும் மக்களிடையே பெருகும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர்.

தமிழ்நாட்டு மக்களுக்கான முதன்மைச் சக்தியாக தமிழக வெற்றிக் கழகம் இருக்கும் எனவும், மக்களுக்காக எதிலும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் எனவும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில் 1967 மற்றும் 1977ஆம் ஆண்டு தேர்தல்களின் வெற்றி விளைவை 2026 தேர்தலிலும் நிகழ்த்திக் காட்டுவோம் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மேலும் தெரிவித்துள்ளார்.