விளையாடி கொண்டிருந்த சிறுமியை ஏமாற்றி வன்கொடுமை செய்த முதியவர்!

0
230

அம்பாறையில் வீட்டின் வளவில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்று முதியவர் ஒருவர் வன்கொடுமை செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய முதியவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமைய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (25) மாலை இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 வயதினை உடைய அச் சிறுமியை அவ்வழியால் மாடு மேய்த்து கொண்டிருந்த 64 வயது மதிக்கதக்க முதியவரே ஏமாற்றி அழைத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விளையாடி கொண்டிருந்த சிறுமிக்கு முதியவரால் நேர்ந்த அசம்பாவிதம் | Girl Abused By Old Man

வழங்கப்பட்ட முறைப்பாடு

அம் முதியவர் தேங்காய் பறித்து தருவதாக அழைத்து சென்று அச்சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்துள்ளதாக சிறுமியின் உறவினரால் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

இதற்கமைய சந்தேக நபரான முதியவரை இன்று நீதிமன்ற நடவடிக்கைக்காக கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக சிறுவர் பெண்கள் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.