முதலிரவன்றே பறிபோன புது மாப்பிள்ளை உயிர்!

0
599

ஆந்திராவில் திருமணம் ஆன புது மாப்பிள்ளை முதலிரவு அறையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகால மண்டலம் பட்டிப்பாடி வாரி பள்ளியை சேர்ந்த துளசி பிரசாத் மற்றும் மதனப்பள்ளியை சேர்ந்த இளம் பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த 13ம் திகதி பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் திருமணமான அன்று முதலிரவு அறைக்குள் சென்ற துளசி பிரசாத் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.

இதனை அறிந்த குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இருப்பினும் அவர் மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.