உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 6 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் சில முக்கிய ரஷ்ய அதிபர்களின் மர்மமான மரணங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய தொழிலதிபர்கள் மரணத்தில் மர்மம்:
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் மோதலுக்கு மத்தியில் இரு நாடுகளின் பொருளாதாரமும் பெரும் பாதிப்பை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் இருந்து ரஷ்யாவின் குறைந்தது 8 முக்கிய ரஷ்ய தொழிலதிபர்கள் மற்றும் வணிகர்கள் மர்மமான சூழ்நிலையில் இறந்துள்ளனர்.

குறிப்பாக, இந்த அனைத்து தொழிலதிபர்களின் மரணத்திற்கும் பொதுவான தொடர்பு உள்ளதா என்பது குறித்து ரஷ்யாவில் இருந்து மேற்கத்திய நாடுகள் வரை விவாதம் நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், ராய்ட்டர்ஸ் அறிக்கையில் வெளியான தகவல்களில் இந்த வணிகர்களில் நான்கு பேர் கேஸ்பிரோம் அல்லது அதன் துணை நிறுவனங்களுடன் தொடர்புடையவர்கள் என கூறப்படுகிறது.

அதே நேரத்தில், இருவர் ரஷ்யாவின் இரண்டாவது பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான லுகோயில் நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள்.
இந்த நிலையில், லுகோயில் நிறுவன தலைவர் ரவில் மகனோவ் மருத்துவமனையின் ஜன்னலில் இருந்து விழுந்து சமீபத்தில் இறந்துள்ளார்.
