யாழில் அதிசய மா இலை; இவ்வளவு நீளமா?

0
132

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் மா மரம் ஒன்றின் இலையானது வழக்கத்துக்கு மாறாக 60 நீளத்தில் மிகப்பிரமாண்டமாக வளர்ச்சியடைந்து காணப்படுகின்ற அதிசயம் நிகழ்ந்துள்ளது.

சாதாரணமாக ஒரு மாவிலையானது 34 சென்ரிமீற்றர் நீளமுடையதாகவே இருக்கின்றது. ஆனால் இந்த மாமர இலையானது சுமார் 60 சென்ரிமீற்றர் நீளமும் 20 சென்ரிமீற்றர் அகலமும் உடையதாக காணப்படுகின்றது.

சாவகச்சேரி டச் வீதியில் உள்ள மானா என்பவரின் வீட்டு முற்றத்தில் உள்ள மாமர இலையே இவ்வாறு வழமைக்கு மாறாக பிரமாண்டமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில் அந்த மா இலையை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழில் அதிசய மா இலை! இவ்வளவு நீளமா? | Miracle Mango Leaf In Yali Is It That Long