துப்பாக்கியுடன் பேட்டிக்கு வந்த அமைச்சரால் பரபரப்பு!

0
525

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இணைய தளமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது துப்பாக்கியுடன் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் சனத் நிஷாந்த தனது இடுப்பில் இருந்த கைத்துப்பாக்கியை மேசையின் மீது வைத்திருந்து விட்டு இடுப்பில் சொருகும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அதை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறப்புரிமையின் கீழ் தனக்கு கிடைத்த துப்பாக்கி என கூறிய அமைச்சர் சனத் நிஷாந்த மகிந்தவுக்கு அல்லது தனக்கு ஏதாவது செய்ய வந்தால் நான் சுடுவேன் எனவும்  நேர்காணிலில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.