கோணேஸ்வர பெருமானை தூக்கி சுமந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

0
128

இந்து கோவிலொன்றில் நடைபெற்ற மகோற்சவத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கலாசார முறையில் இறை பல்லக்கை தூக்கியுள்ளனர்.

வரலாற்று சிறப்பு மிக்க திருகோணமலை திருக்கோணேஸ்வரம் அருள் மிகு மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப் பெருமானின் வருடாந்த மகோற்சவம் நடைபெற்று வருகின்றது.

இந்த உற்சவத்தின் போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருவர் இந்து மத கலாசார உடையுடன் வருகை தந்து பக்தியுடன் இறை பல்லக்கை தூக்கியுள்ளனர்.

குறித்த வெளிநாட்டவர்கள் சுவாமி வீதிஉலா வரும் போது இறை பல்லக்கை ஏந்தியுள்ளனர். வெளிநாட்டவர்கள் இவ்வாறு இறை பல்லக்கை தூக்கும் நிகழ்வை அங்குள்ள பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தமை குறிப்பிடத்தக்கது.