பாரிஸ் ஈபிள் கோபுரத்தை அளவெடுத்துக் கொண்டிருந்தவர் கைது!

0
76

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் விறுவிறுப்பாக நடந்து வந்த 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நேற்றிரவுடன் முடிவுக்கு வந்துள்ளது. நேற்றைய இரவு விழா நிறைவு நிகழ்ச்சிகள் பிரமாண்டமான முறையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று நிகழ்ச்சிக்கு முன்னதாக சந்தேகத்துக்கிடமான வகையில் ஈபிள் கோபுரத்தில் ஏறி அதை அளவெடுத்துக் கொண்டிருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டை அணியாத அவர் கோபுரத்தில் ஏறி அளவெடுக்கும் வீடியோக்கள் இணையத்தில் பரவிய நிலையில் இது போலீசார் கவனத்துக்கு வந்தததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.