ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை முக்கிய எதிராளியாக இலக்கு வைக்கவேண்டும் என நாமல் ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட தலைவர்களுடனான சந்திப்பின்போது அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் கட்சி வெற்றி பெறும் நோக்கத்துடன் செயற்படுமாறும் முக்கிய எதிராளியாக சஜித்தை இலக்கு வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கட்சியில் இருந்து விலகியவர்களை விமர்சிக்க வேண்டாம் எனவும் அவர்களை கடந்த காலங்களில் ஐக்கிய தேசிய கட்சி பல முறை விமர்சித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிரான ஐக்கியப்பட்ட அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். கட்சி உள்விவகாரங்கள் குறித்து கவனம் செலுத்துவதை விட ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிரான பிரச்சாரத்தில் கவனம் செலுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.