சர்ச்சையை ஏற்படுத்திய கச்சத்தீவு புத்தர் சிலை விவகாரம்! இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள தகவல்

0
431

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தைத் தவிர அங்கு வேறு எந்த நிரந்தரக் கட்டடங்களும் இல்லை என கடற்படை அறிவித்துள்ளது.

அங்கு வேறு எந்த நிரந்தரக் கட்டடத்தையும் நிர்மாணிக்க முடியாது, தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளிலேயே கடற்படையினர் தங்கியிருப்பதாக கடற்படை சுட்டிக்காட்டியுள்ளது.

 கடற்படையில் பணியாற்றும் பெரும்பாலானவர்கள் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களாவர். அவர்கள் தமது வழிபாட்டிற்காக சிறு அளவிலான புத்தர் சிலையை வைத்து வழிபட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.