வட மாகாண ஆளுநராக பி.எஸ்.எம் சாள்ஸ் P.S.M. Charles நியமிக்கப்பட்ட நிலையில் ஆளுநரின் சிரேஷ்ட உதவி செயலாளராக கடமை ஆற்றிய லாகினி நிரூபராஜ் தானாக இடமாற்றம் கோரி வடமாகாண கல்வி அமைச்சுக்கு சென்றுள்ளார்.
ஆளுநர் செயலகத்தில் கடந்த காலங்களைப் போன்று முறையற்ற நிர்வாக விடயங்கள் இடம் பெற்றால் தமது கையெழுத்துக்களால் தாமே பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடும் என அஞ்சி குறித்த இடமாற்றத்தைப் பெற்றிருக்கலாம் என சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
