பிளவுபட்ட ராஜபக்ச குடும்பம் ஒன்றாகத் தோன்றிய நிகழ்வு!

0
176

கோட்டாபயவால் பிளவுபட்டுள்ள ராஜபக்ச குடும்பத்தினர் அனைவரும் கொழும்பில் ஒரு நிகழ்வில் ஒன்றாக தோன்றியுள்ளனர்.

ராஜபக்ச குடும்பத்தவர்கள் அனைவரையும் மிக நீண்ட காலத்துக்கு பின் கொழும்பில் நடைபெற்ற இராஜாங்க அமைச்சர் டி.பி. சாணக்கவின் திருமணத்தில் ஒரே இடத்தில் ஒன்றாக காணும் வாய்ப்பு பலருக்கு கிடைத்துள்ளது.

ஜனாதிபதி, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், எம்.பிக்கள் என பலரும் அந்த திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

நாமலுக்கு வாழ்த்து தெரிவிப்பு

பிளவுபட்ட ராஜபக்ச குடும்பம் ஒன்றாகத் தோன்றிய நிகழ்வு! | Rajapaksa Family Came Together An Event

இதேவேளை குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனியாக ஓர் ஆசனத்தில் அமர்ந்து கொண்டதாகவும் இதை கண்ட தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரை தேடித் சென்று அவருடன் உரையாடியதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் நாமல் ராஜபக்ச அவரது மனைவி – பிள்ளையுடன் வருகை தந்ததாகவும் அவரது மனைவி கர்ப்பிணியாக இருப்பதை கண்டவர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.