உலகை அதிரவைத்த சம்பவம்; எல்லா கண்களும் ரஃபா மீதுதான்… வைரலாகும் ஹேஸ்டேக்!

0
107

பாலஸ்தீனத்தில் மக்கள் அதிகம் வாழும் ரஃபா நகரில் உள்ள முகாம் மீது கடந்த மே 26 ஆம் திகதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று சர்வதேச நீதிமன்றம் எச்சரித்திருந்தும் இஸ்ரேல் இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளதற்கு சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

குறித்த தாக்குதல் துரதிஸ்டவசமான தவறு என்று தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு கண்டணங்கள் வலுத்து வரும் நிலையில் உலக அளவில் “எல்லா கண்களும் ரஃபா மீதுதான் உள்ளன” “All eyes on Rafa” என்ற ஹேஸ்டேக் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் உள்ள சமூக அக்கறை கொண்ட மனிதர்கள் ரஃபா மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.