யாழில் 106 பேருக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கிய வீடமைப்பு அதிகார சபை

0
238

யாழ் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 106 பயனாளிகளுக்கு இன்று தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது மேலதிகமாக 20 பயனாளிகளுக்கு வீடமைப்பு கடனுக்கான முதற்கட்ட காசோலையும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி, உப தலைவர் லக்ஷ்மன் குணவர்தன, யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) கே.ஸ்ரீமோகனன், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் யாழ் மாவட்ட முகாமையாளர் எம்.ரவீந்திரன், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், பயனாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.