யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குழாய் வழி சத்திர சிகிச்சைகளின் இமயம் என்று அழைக்கப்படும் சத்திர சிகிச்சை நிபுணர் V. சுதர்சனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த வைத்தியர் தனிப்பட்ட தேவைக்காக கொழும்பு சென்ற நிலையில் அங்கு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னரே மரணத்துக்கான காரணம் தெரியவரும் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் வைத்தியர் சுதர்சனின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.