கனடாவில் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் மாகாணம்

0
39

கனடாவின் புகழ்பெற்ற ஆய்வுக் குழுவான லெஜர் Leger நடத்திய புதிய இணைய கருத்துக்கணிப்பில், கியுபெக் மாகாண மக்கள் தான் நாட்டில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் என்று தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வில் மொத்தம் 39,841 கனடியர்கள் பங்கேற்றனர். அவர்களிடையே மகிழ்ச்சித் தரம் 100-ல் சராசரி 72.4 எனக் கணிக்கப்பட்டு, இது தேசிய சராசரி 68.7-ஐ விட சற்று உயர்ந்த அளவில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கியூபெக் – 72.4 புள்ளிகளையும், நியூ ப்ரன்ஸ்விக் – 70.2 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டு முன்னிலை வகிக்கின்றன. அதற்கு அடுத்தபடியாக நியூஃபவுண்லாந்து & லாப்ரடோர், சாஸ்கட்சுவான், நோவா ஸ்கோஷியா மாகாணங்கள் காணப்படுகின்றன.

நகரங்களின் வரிசையில் மிஸிசாகா (ஒன்டாரியோ) உயர்ந்த மகிழ்ச்சித்தரத்துடன் முதலிடத்திலும், மொன்ட்ரியால் இரண்டாவது இடத்திலும், டொரோண்டோ கடைசி இடத்திலும் காணப்படுகின்றன.