விமான நிலையத்தில் யாரைப் பார்த்தாலும் கையில் பெரிய பெரிய சூட்கேஸ்களுடன் தான் இருப்பார்கள். ஆனால் அதே சூட்கேஸை திடீரென கடித்து சாப்பிட்டால் எப்படியிருக்கும்.
அப்படியொரு வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. வெள்ளை நிற சூட்கேசுடன் ஒரு பெண் சுற்றித் திரிகிறார்.
திடீரென விமான நிலையத்திலுள்ள இருக்கையில் அமரும் அந்தப் பெண் சூட்கேஸின் ஒரு முனைப் பகுதியை பிய்த்து சாப்பிடுகிறார்.
இதனைப் பார்த்த சக பயணிகள் அதிர்ச்சியடைகின்றனர். அந்தப் பெண் சூட்கேஸ் வடிவ கேக் ஒன்றை எடுத்து வந்தமை இறுதியில் தான் தெரிய வந்துள்ளது.
https://www.instagram.com/reel/C-fi2oNMe_S/?utm_source=ig_web_copy_link