அண்ணனிடம் போதைப்பொருள் வாங்கவந்தவருடன் ஓட்டமெடுத்த சிறுமி! யாழில் சம்பவம்

0
325

யாழில் அண்ணனிடம் போதைப் பொருள் வாங்க வந்தவருடன் பதின்ம வயது தங்கை வீட்டைவிட்டு ஓடிய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

சிறுமியின் சகோதரன் போதைப்பொருள் விற்பனையாளர் எனவும், அவரிடம் போதைப் பொருளுக்கு அடிமையான நபர் ஒருவர் தினமும் தனது நண்பருடைய வீட்டில் போதைப் பொருளை பெற்று வந்துள்ளார்.

யாழில் அண்ணனிடம் போதைப்பொருள் வாங்கவந்தவருடன் ஓட்டமெடுத்த பதின்ம வயதுசிறுமி! | A Teenage Girl Ran Away With A Drug Dealer

பொலிசார்  விசாரணை

இந் நிலையில் நண்பனுடைய தங்கையின் மீது போதைப் பொருள் வாங்க சென்றவருக்கு காதல் மலர்ந்தது. நெடு நாட்களாக மலர்ந்த காதல் காரணமாக நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை சுமார் 15 வயது மதிக்கத்தக்க தங்கை வீட்டை விட்டு காதலனுடன் வெளியேறியுள்ளார்.

யாழில் அண்ணனிடம் போதைப்பொருள் வாங்கவந்தவருடன் ஓட்டமெடுத்த பதின்ம வயதுசிறுமி! | A Teenage Girl Ran Away With A Drug Dealer

சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.